இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த மாதம் 20ஆம் திகதி புதன்கிழமை கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளுடன் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி ஆன்மீக வழிகாட்டி அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செபஸ்ரியன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தார்.