இளவாலை புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 26ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூதுப் பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருவிழா திருப்பலி நிறைவில் திருத்தூது பிரதிநிதி அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் இவரது வருகையை நினைவுகூர்ந்து மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருத்தந்தையின் பிரதிநிதி மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களும் இணைந்து ஆலய வளாகத்தில் மரங்களை நாட்டிவைத்தனர்.