அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தையும் மட்டக்களப்பு திருப்பம் புனர்வாழ்வு சிகிச்சை கிளை மைய இயக்குநருமான அருட்தந்தை றஞ்சனகுமார் அவர்களின் ‘இளமையே மனச்சோர்வை மண்டியிடச் செய்’ நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 05ஆம் திகதி வியாழக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு செயலாளர் திரு. அலெக்ஸ் அமலரெட்ணம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை பரீட்சைகள் திணைக்கள பரீட்சை ஆணையாளர் திருமதி. ஜீவராணி புனிதா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நூலை வெளியிட்டுவைக்க நூலுக்கான ஆய்வுரையை யாழ். கல்வி வலய ஆசிரிய ஆலோசகரும் யாழ். திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநருமான திரு. யோன்சன் ராஜ்குமார் அவர்கள் வழங்கினார்.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக், திருக்குடும்ப கன்னியர் சபை யாழ். மாகாண முதல்வி அருட்சகோதரி தியோபின் குருஸ், யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரீபன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்தந்தையின் உறவினர்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin