இலங்கை நாட்டின் 10வது பாராளுமன்ற தேர்தல் கடந்த 14ஆம் திகதி வியாழக்கிழமை மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.
இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் இடம்பெற்ற இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தேசிய பட்டியல் மூலம் கிடைத்துள்ள 18ஆசனங்கள் உள்ளடங்கலாக 159 ஆசனங்களை பெற்று வரலாறுகாணாத பெரும்பான்மையையும் ஜக்கிய மக்கள் சக்தி 40 ஆசனங்களை பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
அத்துடன் இலங்கை தமிழரசு கட்சி 8 ஆசனங்களையும் புதிய ஜனநாயக முன்னணி 5 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலா 3 ஆசனங்ளையும் சர்வஜன அதிகாரக்கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ்ப்பாணம் சுயேட்சைக்குழு இலக்கம் 17, இலங்கை தொழிலாளர் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.