மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட இருநாள் இறையியல் கருத்தமர்வு கடந்த 3ஆம் 4ஆம் திகதிகளில் அங்கு நடைபெற்றன.
மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் தொடர்பாடல் மற்றும் இறையியல் துறைப் பேராசிரியர் அருள்முனைவர் பீற்றர் சிங் அவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட
இக்கருத்தரங்கில் முதல் நாள் “செயற்கை நுண்ணறிவும் (AI) ஆன்மீகமும்” என்ற தலைப்பிலும்
இரண்டாம் நாள் “திருப்பணி அர்ப்பணிப்பை மறுசிந்தனை செய்தல்” என்ற தலைப்பிலும் பேராசிரியர் அவர்களால் கருத்துரை வழங்கப்பட்டு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த இறை ஊழியர்களும், அருட்பணியாளர்களும் பங்குபற்றிப் பயனடைந்தனர்.