பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான வேட்பாளர் குழுவினர் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பு கடந்த 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
அத்துடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர்களும் மறைமாவட்ட ஆயரை 01ஆம் கடந்த திகதி வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் வன்னி மாவட்ட தேர்தல் தொகுதி பெண் வேட்பாளரான யசோதினி கருணாநிதி மற்றும் யாழ்ப்பாண தேர்தல் தொகுதி வேட்பாளரான திருமதி. சசிகலா ரவிராஜ் ஆகியோருடன் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் தொகுதி வேட்பாளரான திரு. வேந்தன் அவர்களும் கலந்து கொண்டார்.
மேலும் அன்றைய தினம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தொகுதி வேட்பாளர்களான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. பாலச்சந்திரன் கஜதீபன் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் திரு. சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் ஆயர் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.