அமெரிக்கா நாட்டின் தூதுவர் ஜூலீ ஜே. சங் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் 25 ஆம் திகதி திங்கட்கிழமை இன்று யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் யாழ். குடாநாட்டின் தற்போதைய நிலைமைகளையும், தென்னிலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மக்களின் போராட்டங்கள் பற்றிய விடையங்களையும் ஆயருடன் இவர் கலந்துரையாடினார்.