யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நடு நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆயரின் பெயர்கொண்ட நாளும், கத்தோலிக்க திருமறைத்தேர்வில் சிறப்பு சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்கள் ஆயர் இல்லத்திலிருந்து பான்ட் வாத்தியங்களோடு புனித மரியன்னை பேராலயத்துக்கு அழைத்து வரப்பட்டு அங்கு ஆயர் தலைமையில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலி நிறைவில் ஆயர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கான வாழ்த்துப்பா வாசிக்கப்பட்டு அவரிடம் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து 2022ஆம் ஆண்டு நடைபெற்ற கத்தோலிக்க திருமறைத் தேர்வில் சிறப்புச்சித்தி பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. 39 மாணவர்கள் இந்நிகழ்வில் பதக்கங்களை பெற்றுக்கொண்டார்கள்.
மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்களுடன் குருக்கள், துறவிகள், இறைமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.