சுவிட்சர்லாந்து நாட்டின் ஓல்ரன் கப்புச்சியன் சபையை சேர்ந்த அருட்சகோதரர் Werner Gallti அவர்கள் கடந்த 21ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

1945ஆம் ஆண்டு பிறந்த இவர் 1969ஆம் ஆண்டு கப்புச்சியன் சபையில் இணைந்து 55ஆண்டுகள் பணிவாழ்வில் நிலைத்திருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் தமிழ் மக்களுக்கும் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளதுடன் இலங்கை தமிழ் மறைமாவட்டங்களுக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகள் புரிந்துவந்துள்ளார்.

இவர் ஒரு வெளிநாட்டவராக இருந்தாலும் இலங்கையிலுள்ள தமிழ் மறைமாவட்டங்களுக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கு பல வழிகளிலும் உதவிபுரிந்துள்ளார்.

அத்துடன் தன்னை அணுகும் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று உதவிபுரியும் நல்லுள்ளம்கொண்டவர். இவரின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin