அருள்பணி. ம.தயாகரன் அடிகளாரின் ‘காருண்யம்’ இறுவட்டின் வெளியீட்டு நிகழ்வு 30.01.2017அன்று திருமறைக்கலாமன்ற கலையகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மறைமாவட் மாவட் ஆயர் பேரருட்திரு. ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்பணி நேசன் அவர்களும், இவ் இறுவெட்டுவெட்டின் மதிப்பீட்டு உரையை வழங்க அருட்பணி. அன்புராசா அவர்களும் கலந்துகொன்டனர்.
இந்நிகழ்வின் போது இறுவெட்டினை அருட்தந்தை தயாகரன் அடிகளாரின் பெற்றோர் திரு. திருமதி. மரியநாயகம் குடும்பத்தினர் யாழ் ஆயரிடம் ஒப்படைத்தனர். முதல் பிரதியினை கொழும்புத்துறை சவேரியார் குருத்துவக் கல்லூரி அதிபர் அருட்பணி. கிருபாகரன் அடிகளார் பெற்றுக்கொன்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய யாழ் மறைமாவட்ட நிதியாளர் அருட்பணி. நேசன்,
எங்களுடைய தேசத்திலே பாடல்கள் எழுதப்பட்டு, இசையமைக்கப்பட்டு, பாடப்பட்டு வெளிவருவது எமது தேசத்தின் கலை வளர்ச்சியைக் காட்டுகிறது. இவ்வாறான கலைஞர்களின் இசைப் படைப்புக்கள் தொடர்ந்தும் வெளிவர வேண்டும் என்றார்.
கிறிஸ்தவப் பாடல்களின் வரலாற்றைப் பார்க்கும் போது தென்னிந்தியாலில் இருந்து பாடல்களைக் கொண்டுவந்து இங்கு பயன்படுத்தினோம். அதன்பின்னர் குறிப்பாக போர்க்காலத்திலும் அதன் பின்னரும் குருக்கள் எழுத்தாளர்கள் தமது பாடல்களை எழுதி இந்தியா சென்று அங்குள்ளவர்களால் பாடல்களைப் பாடி இங்கு அறிமுகப்படுத்தியிருந்தார்கள். ஆனால் இன்று எமது இடங்களிலேயே எமது மறைமாவட்டத்திலேயே பாடல்களை எழுதி இசையமைத்து வெளியிட்டு வைக்கும் நிலை உருவாகியுள்ளது. அருட்பணி தயாகரனினால் வென்றவன், தாயோடு தந்தை, வெள்ளம், காருண்யம் என்ற தலைப்புகளில் அமைந்த இறுவெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளமை பாராட்டப்படத்தக்கது எனவும் தெரிவித்தார்.