இறைபதமடைந்த யாழ். மறைமாவட்டக் குருவாகிய அருட்தந்தை றேஜிஸ் ராஜநாயகம் அவர்களின் 31ஆம் நினைவு நாள் நிகழ்வு கடந்த 13ஆம் திகதி சனிக்கிழமை பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அருட்தந்தைதையின் பணிவாழ்விற்காக நன்றிகூறி அருட்தந்தை நீக்கிலஸ் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இத்திருப்பலியில் குருக்கள், துறவிகள், அருட்சகோதரிகள், அருட்தந்தையின் உறவினர்கள் கலந்து அருட்தந்தையின் வாழ்விற்காக நன்றிகூறி செபித்தனர்.
அருட்தந்தை றேஜிஸ் ராஜநாயகம் அவர்கள் கிளிநொச்சி, நாரந்தனை, புதுக்குடியிருப்பு, மன்னார் விடத்தல் தீவு ஆகிய பங்குகளில் பங்குப் பணியாற்றியுள்ளதுடன் நீண்டகாலமாக யாழ். பல்கலைக்கழக ஆன்மீகக் குருவாகவும் கடமையாற்றியுள்ளார்.
அத்துடன் புனித சவேரியார் குருத்துவக்கல்லூரி விரிவுரையாளராகவும், புனித மடுத்தீனார் சிறிய குருமட ஆன்மீக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளதுடன் 10ற்கும் அதிகமான ஆன்மீக, உளவியல் நூல்களையும் எழுதியுள்ளார்.
சிந்தனையாளராக எழுத்துத்துறையில் ஈடுபாடுகொண்ட இவர் பாதுகாவலன் பத்திரிகையில் மிக நீண்டகாலமாக ஆன்மீக கட்டுரைகளை எழுதியுள்ளதுடன் அர்த்தமுள்ள ஆன்மீகம் எனும் தலைப்பில் யாழ் மறை அலை தொலைக்காட்சியில் தொடர் நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார்.