இறைபதமடைந்த யாழ். மறைமாவட்ட குருவும் அகவொளி நிலைய ஸ்தாபகருமான அருட்தந்தை செபஸ்ரி யேசு இராஜநாயகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு கடந்த 11ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அருட்தந்தையின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் அஞ்சலி உரைகள் அருட்தந்தையின் பணிவாழ்வை பிரதிபலிக்கும் ‘அகவொளி ராஜா’ நூல் வெளியீடும் இடம்பெற்றன.

யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையின் உறவினர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளென பலரும் கலந்துகொண்டனர்.

அருட்தந்தை இராஜநாயகம் அவர்கள் யாழ்ப்பாணம், மன்னார் மறைமாவட்ட பங்குகளில் அளப்பரிய பணியாற்றியதுடன் யாழ். பல்கலைக்கழக ஆன்மீகக் குருவாகவும் அகவொளி குடும்பநல நிலைய இயக்குனராகவும் கடமையாற்றியுள்ளார்.

அவருடைய காலத்தில் அகவொளி குடும்பநல நிலையம் சிறப்பான முறையில் கட்டமைக்கப்பட்டு குடும்ப உளவியல், குடும்ப ஆன்மீகம், உளவள கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin