அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை அல்பன் இராஜசிங்கம் அவர்களின் குருத்துவ 50வது ஆண்டு பொன்விழா நிகழ்வு 27ஆம் திகதி சனிக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து பொன்விழா நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றன.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம், மன்னார் மறைமாவட்ட ஆயர்கள் மற்றும் குருக்கள், துறவிகள், அருட்தந்தையின் குடும்ப உறவினர்கள் இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.