டிச.14. யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட, ஆயர் தியோகுப்பிள்ளை அறக்கொடைப் பேருரை இன்று மாலை 3.30 மணிக்கு, யாழ். அச்சக வீதியில் அமைந்துள்ள பாதுகாவலன் மண்டபத்தில், யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத் தலைவர் அருட்பணி டேவிட் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆயர் தியோகுப்பிள்ளையின் உருவப்படத்திற்கு மலர் மலை அணிவிக்க, யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் ஒளியேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் பங்குபற்றி ‘ அரசும் மதமும் ஒன்றை மற்றொன்று வரையறை செய்தல்: பிரச்சனைகளும் இலங்கையில் சீர்திருத்தத்திற்கான வாய்ப்புகளும் ‘ என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். உரையின் முடிவில் இவ்வுரை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில் குருக்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், பல்கலைகழக மாணவர்களென நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.