யாழ். மறைமாவட்ட குருவும் திருமறைக்கலாமன்ற ஸ்தாபகருமான அமரர் அருட்தந்தை மரிய சேவியர் அவர்களின் அரங்க வலைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.
யாழ். கல்வி வலய ஆசிரிய ஆலோசகரும் யாழ். திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநருமான திரு. யோன்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக ஆங்கில மொழி கற்பித்தல் துறை பேராசிரியர் கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நூலை வெளியிட்டுவைக்க நூலுக்கான வெளியீட்டுரையை திரு. செல்மர் எமில் அவர்களும் மதிப்பீட்டுரையை திரு. அகிலன், திரு. ரமேஸ், திரு. நவராஜ் ஆகியோர் வழங்கியிருந்தனர்.
திருமறைக்கலமன்ற ஸ்தாபகரும் ஈழத்து அரங்க ஆளுமைகளில் ஒருவருமாகிய அருட்தந்தை மரிய சேவியர் அவர்கள் 1994ஆம் ஆண்டிலிருந்து 1999ஆம் ஆண்டுவரை கலைமுகம் சஞ்சிகையில் அரங்க வலைகள் எனும் தலைப்பில் நவவேட்கைவாத மற்றும் மாற்றரங்குகள் தொடர்பாகவும் இதில் ஈடுபட்ட அரங்க ஆளுமைகள் பற்றியும் தொடர்சியாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக அமையப்பெற்ற இந்நூல் நாடகத்துறையில் ஈடுபாடுகொண்ட அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

By admin