“அமைதி, நல்லிணக்கம் மற்றும் வன்முறைகளற்ற பண்பாட்டை உருவாக்குவோம்.” என்ற கருப்பொருளில் வடக்கு, கிழக்கு ஆயர்கள் மன்றத்தின் அமைதி ஆய்வு நிறுவனம் (PEACE RESERCH INSTITUTE) ஓவிய போட்டி ஒன்றை நடாத்த ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளது.
நான்கு தமிழ் மறைமாவட்டங்களிலுமுள்ள அனைவரும் இவ் ஓவியப்போட்டியில் பங்குபற்றுபற்ற முடியும். வடக்கு, கிழக்கு ஆயர்கள் மன்றத்தின் அமைதி ஆய்வு நிறுவனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும். சிறந்த ஓவியங்களுக்கு சான்றிதழும், பணப்பரிசுகளும் வழங்கப்படும். அத்துடன் தெரிவு செய்யப்படும் ஓவியங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுவதோடு அவை அனைத்தும் அமைதி ஆய்வு நிறுவனத்தின் ஓவியக்கண்காட்சிக் கூடத்தில் நிரந்தரமாக காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதுபற்றிய அறிவித்தல் விரைவில் வெளியிடப்படுமென இதற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள அருட்பணி. ஜெறோ செல்வநாயகம் அடிகள் தெரிவித்தார்.