குருநகர் சென். ஜேம்ஸ் கல்வி முன்னேற்ற கழகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சென் ஜேம்ஸ் மகாவித்தியாலய முந்நாள் அதிபர் அமரர் ஜேக்கப் றோமான் அவர்களின் புனரமைக்கப்பட்ட உருவச்சிலை திறப்புவிழா கடந்த 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென். ஜேம்ஸ் பெண்கள் கல்லூரியின் ஓய்வுநிலை உப அதிபர் திருமதி யூயின் யூலியஸ் அவர்களின் தலைமையில் சென். ஜேம்ஸ் மகாவித்தியாலய பிரான்ஸ் பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமரர் ஜேக்கப் றோமான் அவர்களின் நினைவிடத்தில் உருவச்சிலை திறப்புவிழாவும் தொடர்ந்து குருநகர் கலாச்சார மண்டபத்தில் மாணவர் கௌரவிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.
மாணவர் கௌரவிப்பு நிகழ்வில் 2022ஆம் ஆண்டு கா.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு, தையல், கேக் ஐசிங், சிகையலங்காரம் ஆகிய பிரத்தியேகமாக நடைபெற்ற கற்கைநெறிகளில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் மற்றும் கவிதை சிறுகதை ஆகிய கலைத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில் வழங்கலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மக்கள் வங்கி ஓய்வுநிலை பிராந்திய முகாமையாளர் திரு. றோமான் புஸ்பராஜா அவர்கள் பிரதம விருந்தினராகவும் வைத்தியர் திரு. தவரெட்ணம் நிக்சன் திருமாறன் மற்றும் திரு. புஸ்பராசா நிறோசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாவும் பாண்டியன்தாழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை நேசராஜா மற்றும் குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.