யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் இயங்கிவரும் அன்னை திரேசா சமூக சேவைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குருமட மாணவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரியின் ஜோய் கிறிசோஸ்தம் மண்டபத்தில் நடைபெற்ற இவ்இரத்ததான முகாமில் குருமட மாணவர்கள், அருட்தந்தையர்கள், பணியாளர்களென 45 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.