யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு கூட்டம் கடந்த 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் தலைமையில் செயலாளர் அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து யூபிலி ஆண்டு, அது தொடர்பாக யாழ். மறைமாவட்டத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள யூபிலி சிலுவை மற்றும் அதன் பங்கு தரிசிப்பு பற்றியும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை கிளேயர் அவர்கள் கலந்து திருவழிபாடு தொடர்பாகவும் விளக்கவுரைகள் வழங்கினார்கள்.
தொடர்ந்து யாழ். மறைமாவட்ட திருவழிபாடு சார்ந்த கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் பங்குகளின் பிரதிநிதிகள், மறைக்கோட்ட திருவழிபாட்டு இணைப்பாளர்கள், ஆணைக்குழு பொதுநிலை உறுப்பினர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், துறவற சபை பிரதிநிதிகனௌ 60ற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.