மனித அவதாரம் கொண்ட இயேசுவின் அன்பை நினைக்கும் கிறிஸ்மஸ் காலத்தில் நாம் மனித உறவுகளில் நம்பிக்கையையும், மன்னிப்பையும், அமைதியையும் ஏற்படுத்த வேண்டுமெனவும் பலரின் மீட்புக்காகவும் நல்வாழ்வுக்காகவும் இறைமகன் எம்மைத் தேடி வந்ததுபோல நாமும் பலரை இன்று தேடிச் செல்லவேண்டியவர்களாக இருக்கின்றோமெனவும் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு கிறிஸ்மஸ் விழா, எதிர்வரும் யூபிலி ஆண்டின் ஆரம்பமாக அமைவதால் சிறப்பம்சம் பெறுகின்றதென தெரிவித்துள்ள ஆயர் அவர்கள் யூபிலி ஆண்டிற்குள் நுழையும் நாங்கள் நமது குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்குள் அன்புப் பிணைப்பை ஏற்படுத்தி உறவுகளை வலுப்படுத்துவோமெனவும் ஒருவரோடு ஒருவர் கொண்டிருக்கின்ற கசப்பான காழ்ப்புணர்வுகளை துண்டித்து மன்னிப்பின் மக்களாகி நற்செய்தி விழுமியங்களை வாழ்வில் கடைப்பிடித்து உலக மாயைக்குள் சிக்கி வன்முறைக்குள் வாழும் வாழ்வை வெறுத்து ஒளியின் மக்களாவோமெனவும் அழைப்புவிடுத்துள்ளார்.

By admin