யாழ். புனித மரியன்னை பேராலய வருடாந்த திருவிழாவிற்கு மக்களை ஆயத்தம் செய்யும் முகமாக சிறப்பு ஆன்மீக செயற்பாடுகள் அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை மௌலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்று வரும் இந்நிகழ்வில் அன்னையின் திருச்சொருபம் தினமும் வட்டார ரீதியாக எடுத்துச்செல்லப்பட்டு திருச்செபமாலை சொல்லப்பட்டு குழுத்திருப்பலிகளும் ஒப்புக்கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றி தம்மை ஆன்மீகரீதியாக தயார்ப்படுத்தி வருகின்றார்கள்.