மல்வம் திருக்குடும்ப ஆலயத்தின் வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யூன் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 06ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை போல் நட்சத்திரம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை திருகோணமலை மறைமாவட்ட அருட்தந்தை றஜீவன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர். இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள், அயல் ஆலயமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.