மணற்காடு பங்கிலுள்ள கடற்கரை வேளாங்கண்ணி அன்னை ஆலய வருடாந்த திருவிழா 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை சல்வற்றோறியன் சபையை சேர்ந்த அருட்தந்தை நிர்மல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருவிழா அன்று மாலை மணற்காடு அந்தோனியார் ஆலயத்திலிருந்து வேளாங்கண்ணி அன்னை ஆலயம் வரை மெழுகுவர்த்தி பவனியும் இடம்பெற்றது.