புங்குடுதீவு பங்கில் இறைபதமடைந்த அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி கடந்த 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குதந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் வழிநடத்தலில் பங்கு மறையாசிரியர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இத்திருப்பலியை நெடுந்தீவு மாகாவித்தியால ஆசிரியர் அருட்தந்தை சோபன் றூபஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.