கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த மாதிரிப்பண்ணையுடன் இணைந்த விவசாய தகவல் அறிவுமையம் மற்றும் உணவு அறை திறப்பு விழாவும் நிறுவன இணையத்தள அறிமுக நிகழ்வும் கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றன.

நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து உணவு அறையை திறந்துவைத்தார். தொடர்ந்து கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனற் அவர்கள் விவசாய தகவல் அறிவுமையத்தை ஆசீர்வதித்து பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்யதுவைக்க கரித்தாஸ் தேசிய நிறுவன உணவு பாதுகாப்பு இணைப்பாளர் திருமதி. நிலானி திசாரா அவர்கள் தகவல் அறிவு மையத்தினை திறந்துவைத்தார்.

அத்துடன் யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்கள் caritasvanni.org என்னும் நிறுவன இணையத்தளத்தையும் அறிமுகம் செய்துவைத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உமக்கு மகிமை உண்டாகுக Laudato Si என்னும் சுற்றுமடலின் முக்கிய அம்சமாக விளங்கும் “எல்லாம் இணைந்து இருக்கின்றது” எனும் கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், கரித்தாஸ் தேசிய நிறுவன பணியாளர்கள், கிராம மட்ட குழுக்களின் பிரதிநிதிகள், தன்னார்வ பணியாளர்கள், நிறுவன பணியாளர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin