யாழ். மறைமாவட்ட குருக்கள் மற்றும் துறவற சபை குருக்கள் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களுடன் இணைந்து முன்னெடுத்த கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் நிகழ்வு 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இவ்வருடம் குருத்தவ வாழ்வில் 25வருடங்களை நிறைவுசெய்த குருக்கள் தலைமையில் திருப்பலியும் அவர்களுக்கான கௌரவிப்பும் தொடர்ந்து கிறிஸ்மஸ் ஒன்றுகூடலும் இடம்பெற்றன.
ஆயர் இல்ல சிற்றாலயத்தில் நடைபெற்ற திருப்பலியை அருட்தந்தை இராஜசிங்கம் அவர்கள் தலமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலியை தொடர்ந்து யாழ். மறைமாவட்ட குருக்கள் மன்ற தலைவர் அருட்தந்தை ஆனந்தக்குமார் அவர்களின் தலைமையில் அருட்தந்தையர்களான இராஜசிங்கம் மற்றும் றொபின்சன் ஜோசப் ஆகியோருக்கான கௌரவிப்புக்கள் இடம்பெற்றதுடன் ஆயர் இல்ல கோட்போர்கூடத்தில் குருமுதல்வர் தலைமையில் ஒன்றுகூடல் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 100ற்கும் அதிகமான குருக்கள் கலந்துகொண்டனர்.

By admin