இளவாலை திருமறைக்கலாமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட மன்றதின மற்றும் ஒளிவிழா நிகழ்வுகள் 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இளவாலை திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலைக்களரியில் நடைபெற்றன.
மன்ற அங்கத்தவரும் World Vision நிறுவன பணியாளருமான திரு. நிதர்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கலும் நினைவுரையும் இடம்பெற்றன.
அருட்தந்தை அமரர் மரிய சேவியர் அடிகளாரின் வாழ்வும் பணியும் பற்றிய நினைவுரையை யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளரும் திருமறைக்கலாமன்ற நிர்வாக உறுப்பினருமான திரு. தைரியநாதன் யஸ்ரின் ஜெலூட் அவர்கள் வழங்கினார்.
கலை நிகழ்வுகளின் சிறப்பு நிகழ்வுகளாக தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட மூத்த குடிமக்கள் நாட்டுக்கூத்து போட்டியில் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்ட ‘நியாயம் தவறின்’ நாட்டுக்கூத்தும் இளவாலை திருமகை;கலாமன்ற கலைஞர்களினால் ‘தப்பியது மனுக்குலம்’ நாட்டுக்கூத்தும் மேடையேற்றப்பட்டன.
இந்நிகழ்வில் திருமறைக்கலாமன்ற உதவி நிர்வாக இயக்குநரும் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குநருமான அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் திரு, திருமதி. சசிக்குமார் கிருபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் திரு. திருமதி நவறஞ்சன் துசாந்தினி ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.